இலங்கையை ஆபத்திலிருந்து மீட்கும் தீவிர நடவடிக்கையில் ரணில்
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக வங்கியின் பிரதிநிதியுடன் கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலக வங்கி அதிகாரிகளுடன் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னரே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது இது முதல் தடவையல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நாடாளுமன்றத்தில் ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan