முக்கிய பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் ரணில் எடுத்துள்ள நடவடிக்கை
பிரதமராக இன்று உத்தியோகபூர்வமாக பதவியை ஆரம்பித்த ரணில் விக்ரமசிங்க பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
மக்கள் மத்தியிலுள்ள பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதில் அமெரிக்க, இந்திய, சீனத்தூதுவர்களை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இதன்போது 5 பில்லியன் டொலர்களை கடன் வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன் முதற்கட்டாக 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கும் விசேட குழுக்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட நான்கு விசேட குழுக்களை பிரதமர் ரணில் நியமித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கும் குழுவில் வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்தாலோசித்து முன்மொழிவுகளைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டனர். மருந்து தட்டுப்பாடு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணி ருவான் விஜேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு குறித்து அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கவுள்ளார். சாகல ரத்நாயக்க பெற்றோலிய நெருக்கடி குறித்து அறிக்கையிடவுள்ளார்.
இந்தக் குழு அனைத்து பங்குதாரர்களையும் சந்தித்து உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களின் முன்மொழிவுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
