மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கவுள்ள இலங்கை மக்கள் - அடுத்த வருடத்தில் காத்திருக்கும் சிக்கல்கள்
வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டுக் கடன் முகாமைத்துவம் என்பவற்றின் அடிப்படையிலும் அடுத்த வருடத்தில் சிக்கல் நிலை உருவாகலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய நிலவரங்களை கருத்தில் கொண்டு நாட்டின் பொருளாதாரம் மீள்வதற்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில் உள்நாட்டுக் கடன்களை அரசாங்கம் செலுத்தும் நிலைமை ஒன்று இல்லை. இதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும் நிலைமை இன்னும் தாமதமடையும்.. இதனால் மக்கள் கடுமையாக நெருக்கடி நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
அதனை தவிர்க்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
பாரிஸ் கிளப் தவிர்ந்த இலங்கை கடன் பெற்ற ஏனைய நாடுகள் கடன் முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு இன்னும் இணங்கவில்லை எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகரின் மனைவி.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
