இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் டொலர் சலுகைக் கடன் வசதி! இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட தகவல்
இலங்கை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் பாதியை அச்சிட இந்தியாவின் உதவியான 1 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிக தொகை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்காக, அதன் நிதி உதவியின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த ஆண்டு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை இலங்கைக்கு அறிவித்தது.
1 பில்லியன் டொலர் சலுகைக் கடன் வசதி
உணவு, எரிபொருள், மருந்துகள், தொழில்துறை மூலப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசாங்கத்தால் 1 பில்லியன் டொலர் சலுகைக் கடன் வசதி இலங்கை அரசுக்கு நீடிக்கப்பட்டது.
over usd 10 million was used by SPC and private importers to procure printing paper and material from ??. Hon. Minister appreciated timely assistance for enabling import of printing paper for 45% of textbooks required by 4 million young students under the #Indian credit line (2/
— India in Sri Lanka (@IndiainSL) March 9, 2023
இந்த வசதியிலிருந்து, இறக்குமதியாளர்கள் 10 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை இந்தியாவில் இருந்து அச்சு கடதாசி மற்றும் பொருட்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்று உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகம்
2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் 4 மில்லியன் இளம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களில் 45 சதவீதத்தை அச்சிடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது என்று உயர்ஸ்தானிகரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோலியம், உரங்கள், தொடரூந்து மேம்பாடு,
உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதுவரை 4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள
கடன்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம்
தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
