கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள்:சுற்றுலா பயணியொருவரின் நெகிழ்ச்சி செயல்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சதொச நிலையங்களுக்கு முன்பாக தொடர்ச்சியாக காத்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது.
இந்நிலையில்,வெலிகம சதொசவுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்ட இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் அவர்களுக்கு உலர் உணவுகள் அடங்கிய பொதிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரிசியை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள மக்கள் வெலிகம சதொசவில் வரிசையில் நின்ற நிலையில்,அவ்விடத்திலிருந்து காரில் பயணித்த இஸ்ரேலியர் நீண்ட வரிசையில் நின்றதைக் கண்டு வேதனையடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அரிசி பெற வரிசையில் காத்திருந்த 129 பேருக்கு (129) கச்சா அரிசியை இலவசமாக வழங்க இஸ்ரேல் சுற்றுலாப் பயணி ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்படி, இஸ்ரேலிய சுற்றுலாப்பயணி, ஏறக்குறைய 80,000 ரூபா முழுச் செலவையும் சதொச நிறுவனத்திற்கு செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த சுற்றுலா பயணி இலங்கை மீதும் அந்நாட்டு மக்கள் மீதும் அதீத அன்பு கொண்டவர் எனவும், சுமார் 15 வருடங்களாக பௌத்தம் பற்றி அறிந்து கொள்வதற்காக அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் செய்து வருவதாகவும் அவரது இலங்கை நண்பரொருவர் தெரிவித்துள்ளார்.



