ஏமாற்றப்படும் இலங்கை மக்கள்! நெருக்கடியில் இருந்து மீள வழியில்லை
பொருளாதார நெருக்கடியில் இலங்கை மீள்வதற்கு ஐஎம்எப் நிதி உதவி பெரிய வகிபாகம் வகிக்குமென்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் மக்களை முட்டாளாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர் என யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஐஎம்எப் இன் கடன்கள் பாரியளவில் உதவி செய்யும் என்று ஒரு மாயை ஒன்றை ஆளும் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.
மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கை

இலங்கைக்கு ஐஎம்எப் உதவி வழங்குவது இது முதல் முறை அல்ல, கடந்த முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன்னர் 1978ஆம் ஆண்டு இலங்கை திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு வந்ததன் பின்னர் ஐஎம்எப் உதவி வழங்கியது.
இது இப்போது, இந்த ஐஎம்எப்பை காட்டி நாங்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டிடுவோம் என்று அடுத்த தேர்தலையும் வாக்கு வங்கியையும் மையமாக கொண்டு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றதே ஒழிய மக்களை இன்னும் முட்டாளாக்கும் நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
உண்மையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, மக்களுக்கு சுபீட்சமளிக்கும் நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri