பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்: மாபெரும் கையெழுத்து போராட்டம்
"பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்" என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.
முன்வைக்கப்படும் கோரிக்கை
1.பதுக்கல் மற்றும் கொள்ளை இலாபங்களில் இருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடு விலைகளை நடைமுறைப்படுத்தி இறுக்கமாக செயற்பட வேண்டும்.
2. மருந்து, மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தல் மற்றும் மாவட்ட அரச பொது மருத்துவமனைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.
3.நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைக்காமல் அதற்குரிய இலகு பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
4.விவசாயம், கடற்தொழில், சுகாதாரத்துறை போன்றவற்றில் கடமை புரிபவர்களுக்கு தடையில்லாமல் எரிபொருளை வழங்க வேண்டும்.
5. பசி, பட்டினி சாவினை தவிர்க்க வீட்டுத்தோட்டம், சமூக தோட்டங்களை உருவாக்க அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

| இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட உச்சக்கட்ட அதிகரிப்பு |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 7 மணி நேரம் முன்
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam
