பொலிஸாரின் எச்சரிக்கையால் அபாய கட்டத்தில் மக்களின் உயிர்கள்
குற்றத்தை தடுக்கவோ அல்லது குற்றம் நடந்தால் தற்காப்புக்காக சுடவோ பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கான மேலதிக அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் பேச்சாளர், முழங்காலுக்கு கீழே மட்டுமே சுட வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. அது சமூகத்தில் உருவாக்கப்பட்ட கருத்து என்றும், எந்த அடிப்படையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு அல்ல, இலக்கை நோக்கி துல்லியமாக சுடுவதற்கே பயிற்சி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்தின் மூலம் எந்த நேரத்திலும் யாரை வேண்டும் என்றாலும் சுட்டுக் கொலை செய்யும் அதிகாரம் தமக்கு உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்கள் போராட்டத்தை தடுக்க இவ்வளவு மோசமான அதிகாரங்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான விடயம் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
