பரபரப்புக்கு மத்தியில் அலரி மாளிகையிலிருந்து தப்பிய மகிந்த
நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறிச் சென்றுள்ளார்.
நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து மகிந்த வெளியேறியுள்ளார்.
எனினும் நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்திற்கு பணிக்காக சென்ற பலர் இன்னும் அங்கு சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முதல் அலரி மாளிகையை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கி உள்ளதாக அங்கு பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.