தீவிர முயற்சியில் பிரதமர் மஹிந்த - கண்டுகொள்ளாத இளைஞர்கள்
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடலுக்கு தயார் எனவும் அலரி மாளிகை எந்த நேரத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போராட்டமான சூழல் உள்ளது தான். அதற்கு தீர்வு காண கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ள வேண்டாமா? கலந்துரையாடலுக்கு வரவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தான் தொடரும். அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளுங்கள். அதனை மாத்திரமே என்னால் மேற்கொள்ள முடியும்.
அரசாங்கத்தில் அவர்கள் நம்பும் தரப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயார் என்றால் அந்த தரப்பினரிடம் கூற முடியும். தீர்வு காண்பதே நல்ல என நான் நினைக்கின்றேன்.
இல்லை என்றால் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை செய்துகொண்டு இருக்க முடியும். விரும்பிய நாள் ஒன்றில் மதிய வேளையில் கூறினால் அவர்கள் விரும்பும் அமைச்சர் உறுப்பினர்களை அழைத்து வர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரு தடவைகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர்கள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.