காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்: கண்டுகொள்ளாத பொலிஸார்
காலி முகத்திடலில் 16 நாட்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகம் ஏற்பட்டு இளைஞர்கள் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் அங்கிருக்கும் பொலிஸார் அதற்கு எவ்வித பதிலும் வழங்காமல், அந்த இளைஞர்கள் கூறும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதனை காணொளியாக பதிவிட்டு பேஸ்புக்கில் பதிவிடுவதாக கூறிய போதிலும் காதில் கேட்காததனை போன்று பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
வெளியே இருந்து வந்த சிலர் அங்கு புகுந்து விட்டார். பிரச்சினைகள் ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என கூறுகின்றோம் எனினும் சீருடை அணிந்து பொலிஸ் அதிகாரிகள் என்ற ரீதியில் கண்டுக்கொள்ளாமல் இருப்பது நியாயமா என இளைஞர் ஒருவர் பொலிஸாரிடம் வினவியுள்ளார்.
இதன் போது காதலியுடன் தொலைபேசியில் பேசுவது போன்று பொலிஸார் அவ்விடத்தை விட்டு செல்வதனை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
#GotaGoHome2022 #GoHomeRajapakshas #SriLankaEconomicCrisis #SriLankaCrisis #srilanka #lka #arrestrajapaksas @SL_PoliceMedia shame on you pic.twitter.com/y9JJttWFcA
— Munshif gaffar (@GaffarMunshif) April 23, 2022



