கோட்டாபய தொடர்பில் பசில் போடும் திட்டம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உயர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசிலின் திட்டம்
எப்படியிருப்பினும் பொதுஜன பெரமுனவில் இந்த யோசனைக்கு ஆதரவான குழுவும், எதிராக ஒரு குழுவும் உருவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளார்.
கட்சிக்குள் குழப்பம்
கோட்டபாயவின் வருகையின் பின்னர் அவரை கட்சியின் உயர் பதவிக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, அவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், இது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ கலந்துரையாடல் அல்லது இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
