இஸ்ரேலின் இறுதிப் பணயக் கைதியின் சடலம் மீட்பு
காசாவில் பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் கடைசி நபரின் உடலை மீட்டெடுத்துள்ளதாக இஸ்ரேல் படையினர் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான போரை நிறுத்தும் திட்டத்தின் முதல் கட்ட அடிப்படை நிபந்தனைளில் ஒன்று பூர்த்தியாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
காசாவில் 840 நாட்களுக்கு மேலாக கைதியாக இருந்த இஸ்ரேல் பொலிஸ் அதிகாரி ரான் க்வில்லியின் உடல் கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த சடலம் மீட்கப்பட்டமையானது, காசா மற்றும் எகிப்து என்பனவற்றுக்கு இடையிலான ரஃபா எல்லை முகப்பு பகுதி பரிமாற்றத்திற்கு மீள திறக்கப்படுவதற்கான வழியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஆதரவுடன் காசாவை நிர்வகிக்கும் பலஸ்தீன தொழில்நுட்ப குழு இந்த எல்லை திறப்பு இந்த வாரம் நடைபெறும் என கூறியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீத தாக்குதல் நடத்திய போது க்வில்லியை, ஹமாஷ் போராளிகள் பணயக் கைதியாக கடத்திச் சனெ்றதாக இஸ்ரேல் அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணயக் கைதியின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இஸ்ரேல் படையினர் சில காணொளிகளையும் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, க்வில்லியின் உடல் மீட்பு, நாட்டிற்கு ஒரு அற்புத சாதனை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam