இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! அமைச்சரின் அறிவிப்பு வெளியானது
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் உணவுக்கான நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனை கூறியுள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதிகரித்துள்ள விலைகள்..
இதேவேளை, சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் இவ்வாறு உணவுக்கான நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பாரிய அளவிலான வாழ்க்கைச் சுமையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பலர் தினமும் பட்டினியுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மாத்திரம் உணவுண்ணும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
உணவு பணவீக்கம்
இதேவேளை, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளன. பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டினா, சூரினாம், எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் உள்ளன.