சர்வதேச நாடுகளின் முடிவுகளால் தவிர்க்க முடியாத இலங்கையின் நெருக்கடி

Shadhu Shanker
in பொருளாதாரம்Report this article
மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றமையானது நாடு பொருளாதார நெருக்கடியை நோக்கி மீண்டும் நகர்ந்து செல்லுகின்றதா என கேள்வியை எழுப்பியுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு வரை சீனா இலங்கையில் கணிசமான முதலீடுகளை செய்த நிலையில்,அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சீனா(China) தற்போது பெரிய முதலீடுகள் எதனையும் செய்யவில்லை.
இது தவிர அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீடுகளும் இலங்கைக்கு இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் தாமதமடையுமாக இருந்தால் பாரிய நெருக்கடி உண்டாகுமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும், விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
