வரி அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய தகவல்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடன் ஒத்திவைப்பு சான்றிதழ்
தற்போது வர்த்தகக் கடன்களைப் பெற்ற தரப்பினரிடமிருந்து கடன் ஒத்திவைப்புச் சான்றிதழைப் பெறுவது அவசியம் எனவும் அது இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் கிடைத்திருக்காது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
நாட்டின் கையிருப்பு முழுமையாக இல்லாமல் போயுள்ள நிலையில் சர்வதேச நாணயத்திடம் மாத்திரமே நாட்டிற்கு கடன் பெற முடியும் என்ற நிலை காணப்படுகின்றது. எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளோம்.
பொருளாதார நெருக்கடி
இனிமேல் கடன் வழங்கும் நாடுகளின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். தற்போதைய பணவீக்கத்துடன் உருவாகியுள்ள நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் வேதனை தரக்கூடிய கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். விதிக்கப்பட்ட வரி அதிகரிப்பு மேலும் ஒரு வருடத்திற்கு அமுலில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.