பொருளாதார நெருக்கடியின் கோரம்! தலைநகரில் பெண் ஒருவரின் அவலக் குரல்(Video)
இன்றைய பொருளாதார நெருக்கடியால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளமை அறிந்த விடயமே! இந்த பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக உலகையே அச்சத்தில் உறைய வைத்த கோவிட் தொற்றும் காரணமாகும்.
இந்த கோவிட் தொற்று காரணமாக சாதாரண குடும்பங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன.
அவ்வாறு கோவிட் தொற்றால் பாதிக்கபட்டு சமூகத்தால் பெரும் மன உளைச்சலை அனுபவித்த ஒரு பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் தமது வேலையை இழந்து தற்போது சொந்த இடத்தை விட்டு கொழும்பிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு கொழும்பிற்கு இடம்பெயர்ந்தவர்கள் தற்போது தம்மை ஒரு சுய தொழில் ஈடுபடுத்திக்கொண்டு வாழ்க்கையை நடத்தி செல்கின்றனர்.
இவ்வாறு கொழும்பிற்கு இடம்பெயர்ந்த அந்த பெண் அதிஷ்ட இலாப சீட்டை விற்பனையாளராகவும் கணவர் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்பவராகவும் தொழில் புரிகின்றனர்.
இவர்கள் அதிகாலை ஒரு மணிக்கு தமது வேலையை ஆரம்பிப்பதுடன் கடைகளுக்கு ஆப்பம் போன்ற சிற்றுண்டிகளை விநியோகிப்பார்கள். இதன் பின்னர் அவர்களின் வேலைகைளை பார்ப்பதற்கு செல்வார்கள்.
அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் பெண் என்பதால் அவர் இந்த சமூகத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.
மேலும் பல சவால்களுக்கு மத்தியில் இந்த தொழிலை செய்கின்றார். சமூகத்தில் பல பெண்கள், பெண்களாக இருப்பதாலேயே அனுபவிக்கும் இன்னல்கள் பல உள்ளன.
அவற்றில் இந்த பெண் அனுபவிக்கும் சமூக பிரச்சினைகளை மக்களுக்கு அறிய தருவதாகவே எமது இந்த படைப்பு உள்ளது.