இந்த நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தி செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!: ஜி.ஸ்ரீநேசன்
சுதந்திரத்தின் பின்னர் இந்நாட்டை 74 ஆண்டுகளாக ஆட்சி செய்த சிங்களத் தலைமைகள் மேற்கொண்ட சமூக பொருளாதார அரசியல் அணுகுமுறைகள் தோல்வி அடைந்துள்ளன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்தேயாக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சரித்திரத்தைப் படிக்காத மக்கள் தரித்திரத்தில் திண்டாடுவார்கள் என்பது 74 ஆண்டுகள் படிப்பினையாகவுள்ளது. இந்த தோல்வியடைந்த அணுகுமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டதால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
தேசிய ஒற்றுமை சீர்குலைத்து விட்டது. நாட்டின் வளங்களை விற்றுக் கடன்களைத் தீர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் முடியவில்லை.நாட்டுக்குடிமகன் ஒவ்வொருவரும் ரூபாய் 10 இலட்சம் என்ற ரீதியில் கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள்.
பொருளாதாரக் குற்றங்கள்
இதற்குக் காரணம் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களேயாவார். தற்போது போர்க்குற்றத்திற்கு மேலதிகமாக பொருளாதாரக் குற்றத்தையும் அண்மையில் ஆட்சி செய்த தலைவர்கள் இழைத்துள்ளார்கள்.
அடுத்த ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்த பவளவிழாவினை நமது தலைவர்கள் கொண்டாடப் போகின்றார்கள். அதாவது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது.
அந்த ஆண்டிலாவது தோல்வியடைந்த அணுகுமுறைகளான பழையன கழிய முற்போக்கான புதிய அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே அறிவியல் சிந்தனையாகும்.
எனவே சுதந்திரத்தின் பவளவிழாவில் இருந்தாவது ஆட்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைதான்.
பொருளாதாரத்திற்கான முன்னெமாழிவு
1) தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான நிலையான தீர்வு காணப்பட வேண்டும். அதன் மூலம் இனத்தேசியவாதங்கள் கடந்து இலங்கைத் தேசியவாதம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
2) அரசியல் இலாபத்திற்காகப் பின்பற்றப்பட்டு வந்த இனமத அடிப்படை வாதங்கள் களையப்பட்டு தேசிய ஒற்றுமை, கட்டியெழுப்பப்பட வேண்டும்.
3) மதவாதிகளை அரசியலுக்குள் கொணர்ந்து அரசியல் இலாபம் தேடும், குறுகிய நாட்டைக் குட்டிச்சுவராக்கும் அரசியல் தடை செய்யப்பட வேண்டும். சமூக சமய கலாசார சமத்துவங்களை அரசியல் யாப்பு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
4) புலம் பெயர்ந்த புத்தியாளர்கள், பொருண்மிய சக்தியாளர்கள், வளவாளர்களின் நம்பிக்கையையும், நட்புறவையும் வளர்ப்பதன் மூலம் அவர்களது ஆலோசனைகள் ஆக்கபூர்வமான முதலீடுகளை நமது நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
5) ஊழல், மோசடி கையூட்டு வீண்விரயங்களை ஏற்படுத்துவோர், குற்றவாளிகள், ஒழுக்கவீனர்களான அரசியல்வாதிகள், அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். வாக்காளர்களைப் போதையில் மயக்கி வாக்குக்கொள்ளை அடிப்பதும் குற்றம் என்பதை வேட்பாளர்களும் மக்களும் உணரவேண்டும்.
6) அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயற்பாடுகள், வினைக்திறன்களைக் கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் முறையான பொறிமுறைகள் சட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
7) தேர்தலின் போது மோசடிகள், கையூட்டுகள், மதுசாரப் போத்தல் கையளிப்புகள், மோசடியான அதிகாரிகளின் நியமனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் தேர்தலின்போது அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
8) குறித்த ஆண்டுகளுக்கு என்று மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஊழல் மோசடி, ஒழுக்கமற்ற செயல்கள், வன்முறைகள், குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களைப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே மீள் அழைத்தல் (Recall) மூலமாக அவர்களது பதவிகளை வறிதாக்கும் சட்டப் பொறிமுறைகள் அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டும்.
9) ஆக்கபூர்வமான கல்வி முறை ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கக் கூடிய அறிவியல்களங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அத்தோடு பாடசாலை மட்டத்தில் இருந்து நடைமுறை சாத்தியமான தொழிற்கல்வி அளிக்கப்பட வேண்டும். சுயதொழில்களுக்கான திறன்கள் மனப்பாங்குகளை பாடசாலை மூலமாக வளர்க்க வேண்டும்.
10)சமத்துவ உரிமை, திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் அரசியலிலும், நிருவாகத்திலும் வழங்கப்பட வேண்டும். மேலும் அரசியலிலும் வயதுக்கட்டுப்பாடுகள். அடிப்படையான கல்வித் தகுதிகள், ஒழுக்க நியமங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 2015களில் ஒரு தடவை மேற்கொண்ட ஆய்வின்படி க.பொ.த சாதாரணதரம் சித்தியடையாதவர்கள் அல்லது அதிலும் குறைந்த தரங்களில் கற்றவர்கள் 94 பேர் வரை இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை போன்ற முற்போக்கான நடவடிக்கைகளை செயற்படுத்தினால் மட்டுமே நாட்டையும், மக்களையும் மீட்டெடுக்க முடியும். அபிவிருத்தி செய்யவும் முடியும்.
இல்லையேல் நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த நாட்டை மீட்கவும் முடியாது அபிவிருத்தி செய்யவும் முடியாது.
பிரித்தானியர் சுதந்திரம் தந்தபோது நமது நாடு ஆசியாவில் மூன்றாவது பொருளாதார நிலையில் காணப்பட்டது.
தற்போது ஆசியாவில் பொருளாதார வங்குரோத்தில் நமது நாடு முதன்மை நிலைக்கு வந்துள்ளது.மனிதவள அழிப்பில் ஈடுபட்டவர்களால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை குறுங்காலத்தில் மக்கள் அறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இனவாதம் மதவாதம் என்னும் அடிப்படைவாத அரசியல், நாட்டை அழித்து மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை உணர்ந்தால் திருந்தலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
