ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு - ஆய்வில் வெளியான நிலவரம்
சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Verite research நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தை விட, ஜூன் மாத நிலவரத்திற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்விற்கமைய, நாட்டில் நடைபெறும் பணிகள் குறித்து மக்களும் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 4 சதவீதம் பேர் மாத்திரமே திருப்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஜூன் மாதத்தில் 12 சதவீதம் பேர் சாதகமாக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருப்பதாக 8 சதவீத மக்களும், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாக 26.6 சதவீத மக்களும் நம்புகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக 28.8 சதவீத மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.