இலங்கைக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல் - சவுதி அரேபியா வெளியிட்ட இணக்கம்
எரிபொருள் நெருக்கடியில் சிக்கிள்ள இலங்கைக்கு கடன் அடிப்படையில் தொடர்ச்சியாக அதனை வழங்க சவுதி அரேபியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்க மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந்து வருட காலத்துக்கு கடன் அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
சவுதி இணக்கம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் நசீர் அஹமட், அந்நாட்டு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
ஐந்தாண்டு திட்டம்
இதனையடுத்து ஐந்தாண்டு கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் இதற்கான ஆரம்ப இணக்கப்பாட்டை சவூதி வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.