இலங்கையில் மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள்..! உண்மை நிலவரம் குறித்து வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Lanka IOC Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Mayuri Sep 07, 2022 02:41 AM GMT
Report

இலங்கையில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாளாந்தம் மூடப்படுவதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமானது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, அடுத்த நாளுக்கான எரிபொருள் தொகையை பெறுவதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இலங்கையில் மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள்..! உண்மை நிலவரம் குறித்து வெளியான தகவல் | Fuel Stations Petrol Sheds Closed In Sri Lanka

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்திற்கு அமைய, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன்னர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அன்றைய வருமானத்துக்கு முன்பாக பணம் செலுத்துவது என்பது அவர்களுக்கு கடினமானது. இரவு 9:30 மணிக்குள் அல்லது அதற்கு முன் பணம் செலுத்தப்படாவிட்டால் அடுத்த நாள் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் (CPSTL) எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்காது.

இதன் விளைவாக, சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படலாம். கடந்த வாரங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன, ஏனெனில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன் பணம் செலுத்த முடியவில்லை.

இலங்கையில் மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள்..! உண்மை நிலவரம் குறித்து வெளியான தகவல் | Fuel Stations Petrol Sheds Closed In Sri Lanka

நள்ளிரவு வரை காலக்கெடு

லங்கா ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களும் இதேபோன்ற கட்டண முறையைக் கொண்டுள்ளன, ஆனால் அவை நள்ளிரவு வரை காலக்கெடுவைக் கொண்டுள்ளன. இந்த ஏற்பாடு வசதியானது என்கிறார்கள். அரசாங்கம் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

இலங்கையில் மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள்..! உண்மை நிலவரம் குறித்து வெளியான தகவல் | Fuel Stations Petrol Sheds Closed In Sri Lanka

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், நுகர்வோர் தேவையும் அதிகரித்துள்ளதால் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு 4000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3000 மெற்றிக் தொன் பெட்ரோலை விநியோகிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

உரிய நேரத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெறாமை

இதேவேளை இலங்கை பெட்ரோலிய முகவர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன இந்த விடயம் தொடர்பில் தமது கருத்தை பதிவிடுகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்ட போதிலும், சிலருக்கு உரிய நேரத்தில் எரிபொருள் விநியோகம் செய்யப்படவில்லை.

காசோலைகளை முன்கூட்டியே வழங்குவது வியாபாரிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலாக உள்ளது. இது பல நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதற்கு காரணமாக அமைந்தது என குறிப்பிட்டிருந்தார்.

உண்மைக்கு புறம்பான செய்தி

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

இலங்கையில் மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள்..! உண்மை நிலவரம் குறித்து வெளியான தகவல் | Fuel Stations Petrol Sheds Closed In Sri Lanka

கூட்டுத்தாபன பௌசர்களுக்கு மேலதிகமாக பௌசர் ஊர்தி உரிமையாளர் சங்கம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் தனியார் பௌசர்களை முழு வீச்சில் பணிக்கமர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளன.

சில தகவல்களின்படி, முன்னுரிமைப் பதிவேடு அறிமுகம், காசோலை வசதிகள் கட்டுப்பாடு போன்றவற்றால் எந்த சுத்திகரிப்பு நிலையமும் மூடப்படவில்லை. இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நாளாந்தம் சுமார் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் பெட்ரோல் விடுவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US