எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய திட்டம்! எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமையில் புதிய திட்டமொன்று கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டம்
அதன்படி, தேசிய எரிபொருள் அட்டையின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
இதேவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் சுற்றுலா எரிபொருள் அட்டை மற்றும் வாகனம் அல்லாத வகைகளுக்கான எரிபொருள் விநியோகம் என்பன அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
2) Fuel Station Code will be added to the SMS generated when obtaining Fuel to prevent the illegal use of NFP QR from next week. Automated reports for Fuel Station Dealers will made available from today. Dashboard to the public to be made available.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 7, 2022