மகிந்தவினால் மறுப்பு - ரவி கருணாநாயக்கவினால் ரணிலுக்கு கிடைக்கவுள்ள புதிய பதவி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாட்டில் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
புதிய தலைமைத்துவம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைமைத்துவம் இம்முறை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. அதற்கமைய, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
2016ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கையின் விளைவே இலங்கையின் நிதியமைச்சருக்கு தலைமைப் பதவி கிடைக்கவுள்ளது.
57வது மாநாடு
2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாடு, நாட்டின் பொருளாதார மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ச ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு அறிவித்திருந்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி 68 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
