அமெரிக்க டொலர்களில் பெறப்பட்டுள்ள கடன்! அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி
வெளிநாட்டுக் கடன்கள் பொதுவாக டொலர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். உள்நாட்டுக் கடனை அந்த அட்டவணையில் சேர்க்கையில் அவை டொலர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன(Mahinda Siriwardena) தெரிவித்துள்ளார்.
டொலர்களுக்கு மாற்றுகையில் முன்பிருந்த அந்நியச் செலாவணி பெறுமதி 325 ரூபாய். பெறுமதி மாற்றுகையில் ரூபாவின் பெறுமதி 301 ஆகும். அது நல்ல நிலைமையாகும். 325 ரூபாவினால் கணிப்பிட்டதை 301 ரூபா என்ற அடிப்படையில் கணிப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கடன் நிலைத்தன்மை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி 2022 மார்ச் மாதத்தில் எமது பிரச்சினையில் தலையிடுமாறு ஐ.எம்.எப் இற்கு அழைப்பு விடுத்தார். அந்த கோரிக்கையுடன் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்று தான் கடன் நிலைத்தன்மை.
இதற்கு முன்னர் எமது நாட்டில் கடன் நிலைத்தன்மை கிடையாது என ஐ.எம்.எப் கூறியது. நாட்டில் கடன் நிலைத்தன்மை இல்லாமல் ஐ.எம்.எப் இனால் தலையீடு செய்ய முடியாது. கடன் நிலைத்தன்மை இல்லாதபோது கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். இம்முறையும் நாம் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்குச் சென்றோம்.
இதற்கு முன்னர் ஜ.எம்.எப் இற்குச் சென்றதை விட இம்முறை சென்ற செயற்திட்டம் வேறுபட்டுள்ளது. இம்முறை கடன் நிலைத்தன்மை இன்றியே சென்றிருந்தோம். கடன் நிலைத்தன்மையற்ற நாடுகளுக்கு ஐஎம்எப் இனால் கடன் வழங்க முடியாவிட்டால் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் தனியான திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும். நாம் மூன்றாவது தவணை தொகையையும் பெற்றோம். நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தவாறே கடன் மறுசீரமைப்பையும் செற்படுத்தி வருகிறோம். இரு பாதைகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதில் ஒரு அங்கமாகவே கடன் மறுசீரமைப்பை மேற்கொள்கிறோம்.
முழுக் கடன்தொகையும் அமெரிக்க டொலர்களிலே பெறப்பட்டுள்ளது
அடுத்து, 2024 மார்ச் மாதமளவில் கடன் நிலைமையை கடன் அறிக்கையின் ஊடாக வெளியிட்டோம். அதில் உள்ள ஒரு அட்டவணையில் 100 பில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் சரியானது தான். முழுக் கடன்தொகையும் அமெரிக்க டொலர்களிலே பெறப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டுக் கடன், வெளிநாட்டுக் கடன் என்பன பெறப்பட்டுள்ளன.
வெளிநாட்டுக் கடன்கள் பொதுவாக டொலர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். உள்நாட்டுக் கடனை அந்த அட்டவணையில் சேர்க்கையில் அவை டொலர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. டொலர்களுக்கு மாற்றுகையில் முன்பிருந்த அந்நியச் செலாவணி பெறுமதி 325 ரூபாய். பெறுமதி மாற்றுகையில் ரூபாவின் பெறுமதி 301 ஆகும். அது நல்ல நிலைமையாகும். 325 ரூபாவினால் கணிப்பிட்டதை 301 ரூபா என்ற அடிப்படையில் கணிப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது.
வெளிநாட்டுக் கடன் தொகையை சேர்க்கையில் நாம் கடன் பெறாத போதும் அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தின் வீழ்ச்சியானது டொலர்களில் அதிகரித்துக் காட்டும். கடன் பெறாமல் நாட்டை நிர்வகிக்கலாம் என்று யாராவது சொன்னால் அதனை ஏற்க முடியாது.
கடனை நுகர்வுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் கடனை, சரியான, செயற்திறன் மிக்க, பயன்மிக்க பொருளாதார விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தி, முதலீடுகளை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டால் தான் கடனைத் திருப்பிச் செலுத்தும் இயலுமையை அதிகரித்துக்கொள்ளலாம். அதனைத் தான் நாம் எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |