34 இலட்சம் இலங்கை குடும்பங்களின் வருமானம் சரிவு
பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
34 இலட்சத்து 48 ஆயிரம் குடும்பங்களின் வருமானம் இவ்வாறு குறைவடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
வீழ்ச்சியடைந்துள்ள வருமானம்
இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிடுகையில்,
மொத்த குடும்ப அலகுகளில் 60.5% வருமானம் குறைந்துள்ளது. குறிப்பாக பெருந்தோட்ட துறையில் வருமானம் அதிகம் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 1,70,000 குடும்பங்களின் வருமானம் குறைவடைந்துள்ளது.
இரண்டாவதாக, கிராமப்புற மக்களின் வருமானம் அதிக வீழ்ச்சியைக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட 45,00,000 குடும்பங்கள் உள்ளன. 27,00,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 3.6 மில்லியன். இதில் ஏறக்குறைய 9,50,000 குடும்பங்கள் உள்ளன, அதில் 5,00,000 குடும்பங்கள் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 21 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam