தலைமையை மொட்டுக்கு வழங்கியது நாடாளுமன்றுக்கு அவமதிப்பு: ஹர்ஷன சீற்றம்
நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய்வதற்கான தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்கியது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.
இன்று (18.07.2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றியதாவது, நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டு வலியுறுத்தினோம்.
நிதி வங்குரோத்து நிலை
நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய மொட்டு கட்சியின் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு தற்போது வங்குரோத்து அடைந்துள்ளது.
தெரிவுக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
எமது கோரிக்கைக்கு அமைய நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய தெரிவுக்கு நியமிக்கப்பட்டது.
ஆனால் தெரிவுக்குழுவின் தலைவர் பதவி வங்குரோத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழு நியமனத்தில் நேர்ந்துள்ள தவறை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு சபாநாயகருக்கு உண்டு.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்
பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வங்குரோத்து தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தற்போது வங்குரோத்து அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த தெரிவுக்குழுவை புறக்கணித்துள்ளனர்.
நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவில் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் அதனை விடுத்து தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவது நாடாளுமன்றத்தை அவமதிப்பாகக் கருதப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
