எம்மை யாராலும் தடுக்க முடியாது! மகிந்த அணியின் மீள் எழுச்சி

Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Podujana Peramuna Prasanna Ranatunga Sri Lankan political crisis
By Benat Nov 03, 2022 06:16 PM GMT
Report

வீடுகளை எரித்தும் சேற்றை வீசியும் எங்கள் அரசியலை நிறுத்த முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழாது மாற்றாக வலுவடையும் ஒரு அரசியல் கட்சியாகும். எமது எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

கட்சி அரசியலை ஒதுக்கி வைக்க வேண்டும்

எம்மை யாராலும் தடுக்க முடியாது! மகிந்த அணியின் மீள் எழுச்சி | Sri Lanka Economic Crisis

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்நதும் தெரிவிக்கையில்,

மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தைப் பெற முடியாத சதிகாரர்களின் கூட்டமே மக்களை வீதிக்கு இறக்கி நாட்டை பின்னோக்கி திருப்ப முயல்கிறார்கள். இத்தருணத்தில் கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது.

இந்த நாடு அழிந்து கொண்டிருக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கும் கூடத்திற்கு இவற்றை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது நாட்டைப் பின்னோக்கித் தள்ள வேண்டும் என்று அந்தக் கூட்டம் முயற்சிக்கிறது. மக்களைக் குழப்பி வீதிக்கு அழைத்துச் சென்றால் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கது.

ஆனால் சில அரசியல் கட்சிகள் மக்களை அடைத்து வைக்கும் செயல்களை செய்கிறார்கள். நாட்டைப் பொறுப்பேற்கச் சொன்னால், அதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள்.

இந்த போராட்டங்களால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையை எங்கள் எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எமது எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது

எம்மை யாராலும் தடுக்க முடியாது! மகிந்த அணியின் மீள் எழுச்சி | Sri Lanka Economic Crisis

மக்கள் வாக்குகளில் வெற்றி பெறாத ஒரு குழு அந்த பொது அழுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியது. அந்த கும்பல் இன்றும் மக்களை குழப்பி வீதிக்கு கொண்டு வருகின்றனர். இந்த தருணத்தில் கட்சி அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும். இப்போது செய்ய வேண்டியது நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து மீள உறுதுணையாக இருக்க வேண்டும். அது போல கால்களை மாட்டிக் கொண்டு முன்னோக்கி நகர்வதை நிறுத்துவது அல்ல.

போராளிகள் என்று கூறிக்கொள்ளும் அந்த சதிகாரர்கள் மே 9 ஆம் திகதி எமது வீடுகளுக்கு தீ வைத்த போது எமது அரசியல் பயணமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணமும் முடிந்து விட்டதாக நினைத்தார்கள்.

வீடுகளை எரித்தும் சேற்றை வீசியும் எங்கள் அரசியலை நிறுத்த முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழாது மாற்றாக வலுவடையும் ஒரு அரசியல் கட்சியாகும்.அந்த எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டார். 

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US