மக்களை வாட்டும் பொருளாதார பேரிடர்! ஒருவேளை உணவிற்கே பரிதவிக்கும் உறவுகள்(Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரிடர் காரணமாக ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா என்ற போராட்டத்தை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.
விலை அதிகரிப்பு, பற்றாக்குறை, வருமானமின்மை, தொழிலின்மை என பொதுமக்களை இந்த பொருளாதார நெருக்கடி வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.
ஒருவேளை உணவிற்கே பரிதவிக்கும் நிலை
வசதிப் படைத்தவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்கள் வரை இன்று மிக இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
மிக இலகுவாக கூறுவதென்றால், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைப் பெற்றுக்கொள்வதற்கே பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களிடத்தில் சில கருத்துக்களை நாங்கள் பெற்றுக்கொண்டிருந்தோம்.
அதன்படி, அன்றாடம் தொழில் புரியும் மக்கள், கூலித் தொழில் செய்யும் மக்கள் மிகப் பெரிய பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
வயதானவர்கள், சிறுவர்கள் என அனைவரும் இந்த இக்கட்டுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இவர்களுக்கு உதவ முன்வருபர்கள் வரவேற்கப்படுகின்றனர்.