ஈஸ்டர் தாக்குதல் நாளில் நாடாளுமன்றத்தில் ஹக்கீம் மீது அமைச்சர் கடுமையான குற்றச்சாட்டு

colombo Parliament Sri Lanka Easter bombings Rauff Hakeem
By Dias Apr 21, 2021 07:59 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை அமர்வுகள் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விவாதத்தை நடத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தியினர் கோரிய போதிலும், அரச தரப்பினரால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சபா மண்டபத்திற்கு வந்த எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத அளவுக்கு கூச்சல் நிலை ஏற்பட்டதால் 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். 

இந்தநிலையில் இன்றைய தினம் ஆளும் கட்சியினர் கறுப்பு பட்டியணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்துடன், எதிர்கட்சியினர் கறுப்பு ஆடையணிந்திருந்தனர்.


இதன்போது ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், ஆளும் எதிர்கட்சிக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டிருந்தது.

எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர், கருத்து வெளியிட்ட சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, ஹக்கீம் கறுப்பு பட்டி அணியாமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

உங்களுக்கு வெக்கமாக இல்லையா? நீங்கள் இங்கே எழுந்து நின்று பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் கறுப்பு பட்டியும் அணியவில்லை. கறுப்பு டையும் அணியவில்லை. என தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

அத்துடன் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக இன்று காலை 8.45 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கறுப்பு உடை அணிந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US