இலங்கையில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lanka Earthquake
By Jenitha Mar 19, 2023 03:14 PM GMT
Report

இலங்கையில் இன்று இரண்டு சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

"திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த - பலடுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது" என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 

திருகோணமலை, திம்பிரிவெவ, கோமரன்கடவல பிரதேசத்தில் இன்று (19.3.2023) அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Sri Lanka Earthquake Today

இதேவேளை, நேற்று மாலை 06.46 மணியளவில் கிரிந்த - பலடுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இரண்டு நிலநடுக்கங்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அவை இந்நாட்டின் நில அதிர்வு நிலையங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்ததாவது,

 

எதிர்காலத்திலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம்

இலங்கையில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Sri Lanka Earthquake Today

 “இதுவரை காலமாக ஏற்பட்ட நிலநடுக்கங்களின் ரிக்டர் அளவுகோலைப் பார்த்தால், கடந்த 30-40 ஆண்டுகளில் 4 க்கும் குறைவான நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன.

எனவே பெரிய நிலநடுக்கங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் 2, 2.5, 3, 3.5 போன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் நடக்கலாம்." நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கங்களுக்கு மேலதிகமாக, பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன மற்றும் ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து இந்த நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன என தெரிவித்துள்ளார். 

மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

மேலும், இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

“இலங்கையில் இயங்கி வரும் 4 நில அதிர்வு அளவீடுகளும் இந்த நிலநடுக்கத்தை பதிவு செய்திருந்தாலும், பொதுமக்கள் எங்களிடம் எந்தவிதமான முறைப்பாடும் செய்யவில்லை. இந்த நிலநடுக்கங்கள் பற்றிய ஆய்வில் நாம் குறிப்பிடக்கூடிய காரணிதான் நேற்று நாள் பூராகவும் இலங்கை அமைந்துள்ள இந்திய-அவுஸ்திரேலிய தட்டு மற்றும் மேலே உள்ள ஆசிய தட்டுக்கு இடையே 4-5 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த நிலநடுக்கங்களின் அதிர்வே இலங்கை எல்லையில் உணரப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

May you like this Video


மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US