தொலைபேசிகளுக்கு வரும் சாரதி அனுமதிப் பத்திரம்! இலங்கையில் புதிய முறை
இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதில் புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைபேசிகளின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை வகுக்கப்படும்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது.
சாரதி அனுமதிப் பத்திர அட்டை
இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை.
சாரதி அனுமதிப்பத்திரம் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். தேவைப்படுபவர்கள் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும். சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே தொலைபேசிகளுக்கு வழங்குவதனுடாக அது மிகவும் வசதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
