ரஷ்யாவுடன் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ள இலங்கை
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கும்(Kamal Gunaratne) ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது ரஷ்யாவின் (Russia) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (Saint Petersburg City in Russia) நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான 12 ஆவது சர்வதேச கூட்டத்தின் போதே இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள்
இதன்போது அவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இரண்டு செயலாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
