இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர்களை கோரும் இலங்கை
இலங்கை பல தசாப்தங்களாக எதிர்நோக்காத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில், அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக கேட்டுள்ளதாக ரொய்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதனை இரண்டு தரப்புகள் இன்று உறுதி செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது 70 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான பணத்தை செலுத்த முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கி வருகிறது.
இதன் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்கனவே அத்தியவசிய பொருட்கள், மருந்து மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் இருந்து 1.4 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri