இலங்கையின் வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,854 மில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தரவுகள் மூலம் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி
அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தல் முதல் இந்த ஆண்டு மே 5 ஆம் திகதி வரை, சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர்த்து ஏனைய தரப்புகளிடம் இருந்து மொத்தமாக 1,854.77 மில்லியன் டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட 18 திட்டங்கள் தொடர்பாக இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் பலதரப்புக் கடன்கள் மற்றும் இருதரப்புக் கடன்கள் அடங்கும். இந்தக் கடன்கள் ஜப்பான், கொரியா, சவூதி அரேபியா, நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இலங்கை இதுவரை 102.02 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே, தற்போதைய அரசாங்கத்தால் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை அடைய முடிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam