ஐரோப்பிய நாடொன்றில் மற்றுமொரு இலங்கையர் பலி
இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் மேலும் ஒரு இலங்கையர் உயிரிழந்துள்ளார்.
கடந்த (21.05.2023)ஆம் திகதி ரோம் தலைநகர் கொர்னேலியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரோம் நகரில் வசிக்கும் மன்னகே மார்கோ என்ற 25 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் இரவு தனது நண்பர்கள் குழுவைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றுள்ள விதம்
சிறிய மின்சார ஸ்கூட்டரில் சென்றபோது, ரோம் வீதியில் ஓடிக்கொண்டிருந்த சரக்கு வான் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் இத்தாலியின் ரோம் தலைநகரில் பிறந்து பெற்றோருடன் வசித்து வந்த இலங்கை பூர்வீகம் கொண்டவர் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரோம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இத்தாலியில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
