முதலில் மக்கள் ஆதரவை பெறுங்கள் - மஹிந்த குழுவினருக்கு ஜனாதிபதி சவால்
கிராமத்தில் வாக்களிக்கும் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக கிராமங்களுக்கு சென்று மக்களுக்குத் தெரிவிக்க சந்தர்ப்பம் உள்ளதால் கிராமத்திற்குச் சென்று நாட்டின் உண்மையான நிலைமையை விளக்குமாறு ஜனாதிபதி பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் தற்போது தேர்தலை கோருவதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளதுடன், தேர்தலை நடத்துவது குறித்து கவலைப்பட வேண்டாம் என ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் என தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
