இலங்கை வந்த இந்திய பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி - ஆர்ப்பாட்டக்காரர்களின் செயல்
இலங்கையில் பதற்றத்தின் போதும் என்னை ஆர்ப்பாட்டக்காரர்கள் காப்பாற்றினார்கள் என இந்தியாவின் ND தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் “ஜுலை 13ஆம் திகதி இலங்கைக்கு மிகப்பெரிய நாள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்கு வெளியே நிலைமை மோசமடைந்தது, அங்கு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி எவ்வாறு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார் என கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
நான் செய்திகளை சேகரிக்கும் போது தொடர்ந்து கண்ணீர் புகை பிரயோகத்திற்குள்ளானேன். ஆனாலும் தொடர்ந்து பணிகளை தொடர்ந்தேன். இதன் போது என்னால் கண்களை திறக்க முடியாமல் போனது.
மக்கள் மிகவும் ஆவே சத்துடன் கோட்டா கோ ரணில் கோ என கூச்சலிட்டு வந்தனர். என்னால் மூச்சுவிட முடியாமல் போனது. கண்ணீர் வடிய தொடங்கியது. இதனை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் என்னை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நீர் வழங்கி கண்களை கழுவ உதவினார்கள். கோபம், விரக்தி வெறுப்பின் உச்சத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த போதிலும் எனக்கான உதவிகளை செய்தார்கள்.
நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினேன். எனினும் ஒன்றும் நடக்காது எங்களுக்கு கண்ணீர் புகை பழகிவிட்டது. பயப்பட வேண்டாம் என சமாதானப்படுத்தினார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
