கிளிநொச்சியில் 13 வயது சிறுமிக்கு நடந்த சோகம்! விசாரணையில் வெளிவந்த தகவல்
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் விசேட தேவைக்குட்பட்ட குடும்பத்திலுள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாயவனூர் கிராமத்தில் வாழும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் தங்கி வாழும் 13 வயது சிறுமி ஒருவரை அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ஒருவரால் தொடர்ச்சியாக பல தடவை தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கடந்த வாரம் இடம் பெற்றுள்ள போதும் இதனை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் பலரால் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த பிரதேசத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புகளோ அல்லது கிராம அலுவலர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரச அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை இன்றி பாராமுகமாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam