தமிழர் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஐவர்! விசாரணைகள் குறித்து வெளியான தகவல்(Video)
இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், பொலிஸ் சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வையுடன் இணைந்திருக்கின்றோம்.
அந்த வகையில்....
நெடுந்தீவில் 5 நபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு 12ஆம் வட்டாரம் j/06 கிராம சேவகர் பிரிவில், மாவிலி துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும், 1 நபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தெடார்பில் மேலதிக தகவல்கள் எவையும் இது வரை வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் கடற்படையினரும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியுடன் மற்றும் பல குற்றம் தொடர்பான செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய குற்றப்பார்வை விசேட தொகுப்பு,