இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழு!நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளவர்களை எதிர்வரும் காலங்களில் வெளியிடுவதாக அதன் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்
நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை .நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவில்லை
இருப்பினும், எந்தவொரு நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்த முடிவு குறித்து தனக்கு குழப்பமோ ஆச்சரியமோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்
இருந்தபோதும், இலங்கை கிரிக்கெட்டை புதுப்பிக்கும் சரியான வாய்ப்பை இழக்க நேரிட்டதில் தாம் ஏமாற்றமும் வருத்தமும் அடைவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் ஆதரவு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் இடைக்காலக் குழுவை இடைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் பெயர்களை உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
