இலங்கை கிரிக்கெட் அணியால் ஜனாதிபதி - அமைச்சர்களுக்கு இடையில் மோதல்
அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் பாரிய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் தொடர்பான தீர்மானங்களில் சாகல ரத்நாயக்கவின் தேவையற்ற தலையீடுகளினால் பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள நேரிட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
ரொஷான் - சாகல வாக்குவாதம்
சாகல அமைச்சரவைக்கு மேலே சென்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றார் என அமைச்சர் குறிப்பிட்டதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் இதன் காரணமாக கிரிக்கெட் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அமைச்சர் ஜனாதிபதியுடன் கூட முரண்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.