ஆப்கானிஸ்தானுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு பின்வரும் 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் 2022 நவம்பர் 25, அன்று ஆரம்பமாகவுள்ளது.
16 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார்.
பெயர் பட்டியல்

பத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித, மகேஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, லஹிரு குமார ஆகியோர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க விரும்புவதால், தற்போதைய அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பானுகா ராஜபக்ச இலங்கை கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பானுகா ராஜபக்ச அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது துபாயில் இடம்பெற்று வரும் டி10 போட்டிகளில் பங்குபெற்ற அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்ற சான்றிதழையும் வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri