ஆப்கானிஸ்தானில் குண்டுதாக்குதல்! இலங்கை கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் உள்ள லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் கடந்த 30ம் திகதி பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மீதான கண்மூடித்தனமான வன்முறை, அராஜகத்தைக் கொண்டுவர விரும்பும் குற்றவாளிகளின் கொடுமையை நிரூபிக்கிறது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு நீடித்த அமைதியைக் கொடுப்பதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கிறோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 30 பேரில் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
கிழக்கு லோகர் மாகாணத்தின் தலைநகரான புல்-இ-ஆலத்தில் மாணவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் விருந்தினர் மாளிகைக்கு அருகில் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்தது.
டஜன் கணக்கான மக்கள் காயமடைந்தனர். கூரைகள் இடிந்து விழுந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளதாகவும் சாட்சிகள் விவரித்தனர்.
செப்டம்பர் 11க்குள் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்ததிலிருந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 19:00 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
கொல்லப்பட்டவர்களில் சில உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளத் தயாராகி வருவதாக லோகரின் மாகாண சபைத் தலைவர் ஹசிபுல்லா ஸ்டானெக்ஸாய் தெரிவித்தார்.
90 பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்த பகுதியில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
"வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன, மக்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளனர் என்று அவர் கூறினார். "பாதுகாப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
