அரசாங்கத்திற்கெதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்! ஒன்று திரண்ட காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்(Video)
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட மேலும் பலர் இணைந்து பத்தரமுல்லையில் உள்ள தியதஉயன பகுதியில் இந்த சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கறுப்பு உடைகள் அணிந்து போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மக்களுக்கு நீதி வேண்டும்! விலைகள் குறைக்கப்பட வேண்டும்..
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களுக்கு நிவாரணம் வழங்காத இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற தொணிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும், பிரதான உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்தும், விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காலி முகத்திடல் போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.














கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri