பிரபல முதலீட்டாளருக்கு வழங்கப்படும் கொழும்பு துறைமுகத்தின் பெறுமதியான நான்கு காணிகள்
கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்குவதற்காக எரிபொருளை (பங்கரிங் எரிபொருள்) சேமிப்பதற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு கொழும்பு துறைமுகத்தில் உள்ள பெறுமதியான நான்கு காணிகளை வழங்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலத்தின் ஒரு பகுதி விமான எரிபொருளை சேமித்து வைப்பதற்காக வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இல்மனைட்டை இறக்குமதி
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இதுபோன்ற முதலீடுகள் இன்றியமையாதவை என்றும் சமீபத்திய போராட்டங்களால் பதினேழு கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இல்மனைட்டை இறக்குமதி செய்வதற்கு திருகோணமலை துறைமுகத்தை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கொழும்பு துறைமுகத்தை விற்பனை செய்வதை கனவில் கூட நினைக்கமாட்டேன் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam