சிறுவர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் பேரணி (Video)
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கொழும்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் ஆர்ப்பாட்ட பேரணி Bluementel Child development center அமைப்பினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் பேரணியில் சிறுவர்கள் பலர் பங்குபற்றியிருந்ததுடன் பெற்றோர்கள், அசிரியர்கள், , சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப் போராட்டம் 5 முக்கிய விழிப்புணர்வுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவை சிறுவர்களிடையேயான சரீர ரீதியான பாதுகாப்பு, உடல் ரீதியான பாதுகாப்பு, உணர்வு ரீதியான பாதுகாப்பு, பாலியல் ரீதியான பாதுகாப்பு, இணையதளத்தின் ஊடாக பாதுகாப்பு பெறுவது குறித்து சமூக மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இவ் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவில் 15 வயதுடைய மாணவனை காணவில்லை (Photo) |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
