சீரற்ற காலநிலையால் இருவர் பரிதாப மரணம்! 3600 பேர் பாதிப்பு..
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலையால் 1,151 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவசர நிவாரணப் பணி
இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் விபவரங்கள்:- கொழும்பு மாவட்டம்: 1,469 பேர் பாதிப்பு. புத்தளம் மாவட்டம்: 1,264 பேர் பாதிப்பு. களுத்துறை மாவட்டம்: 529 பேர் பாதிப்பு. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முடுக்கிவிட்டுள்ளது.
மழை தொடரும் பட்சத்தில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam