விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையானின் சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணை கோரும் மகிந்த தரப்பு
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
விசாரணை வேண்டும்..
கிரிபத்கொடவில், இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Santhirakanthan) எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri