கொழும்பில் தாய் - மகளுக்கு நேர்ந்த கொடுமை - பயத்தில் உயிரை மாய்த்த நபர்
நாவலப்பிட்டியில் 13 வயது பாடசாலை மாணவியை பல நாட்களாக துஷ்பிரயோகம் செய்த ஒரு பிள்ளையின் தந்தை, தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவம் வெளியில் வந்து பொலிஸாரிடம் சிக்கி விடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.
நாவலப்பிட்டி, தொம்பகஸ் தலாவ பிரதேசத்தில் உள்ள மயானம் ஒன்றில் குறித்த நபர் மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளா சிறுமியின் உறவினர் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபருக்கு 13 வயதுடைய மகள் ஒருவர் உள்ளதாகவும், அவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் சந்தேகநபரின் மனைவியின் சகோதரி எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து பாடசாலை வகுப்பு ஆசிரியையிடம் சிறுமி கூறியதையடுத்து, அந்த ஆசிரியை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதற்கமைய சந்தேகநபரின் வீட்டிற்கு பொலிஸார் நேற்று சென்றுள்ளனர். இதன்போது ஓடிச் சென்றவர் மயானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.