இலங்கையினால் தொடர் முடக்கத்தை சமாளிக்க முடியாது! நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
இலங்கையை தொடர்ந்தும் முடக்கினால் அதனை சமாளித்து கொள்ளமுடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLanka CAN'T afford a #lockdown.
— Ajith Nivard Cabraal (@an_cabraal) August 28, 2021
Half the #population won't be able to face it's fall-out:4.5 mn in #SME will be driven to despair:Macro fundamentals will be seriously compromised (1/2) pic.twitter.com/lgJKGYykbF
நாட்டை தொடர்ந்தும் முடக்குவதனால் நாட்டிலுள்ள சுமார் 4.5 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டை தொடர்ந்தும் முடக்கினால் சகல பொருளாதார கோட்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும்.
இதன்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



